தவெக நிர்வாகி மறைவு - விஜய் இரங்கல்

70பார்த்தது
தவெக நிர்வாகி மறைவு - விஜய் இரங்கல்
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் நேற்று (அக்.21) மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “என் மீதும் நம் தவெக மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி சரவணன், திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி