டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி

45936பார்த்தது
டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி
பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் அண்ணாமலைதான் பிரச்சை என்றால் அவரை மாற்றவும் தயார் என பாஜக தரப்பில் அதிமுகவிற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அமைய வேண்டும் என மோடி விரும்புவதாகவும், அதனால்தான் பாஜக மூத்த தலைவர்கள் விடாப்பிடியாக எடப்பாடி பழனிசாமியை துரத்தி வருகின்றனர். நேற்று மாலை 6 மணி வரை அவகாசம் அளித்தும் அதிமுக தரப்பில் இருந்து கூட்டணிக்கான ஒப்புதல் வரவில்லை என்பதால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்ற ஆலோசனையில் பாஜக மேலிடம் இறங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி