Deadpool and Wolverine கடந்த 26-ந் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் இப்படம் இந்த வார இறுதியில் ரூ.83.28 கோடி வசூலித்துள்ளது. இந்தநிலையில், ரியான் ரெனால்ட் மற்றும் ஹக் ஜேக்மேன் நடித்துள்ள இப்படம், முதல் வாரத்தின் இறுதியில் ரூ.3650 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பியுள்ளது. இது 2024-ம் ஆண்டில் வெளியான படங்களில் ஆரம்பத்திலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.