அளவாகவோ அல்லது குறைந்த அளவோ மது அருந்துவதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 1,35,103 பேரை 12 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின்படி, சிறிதளவு மது அருந்தினாலும் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும். முதல் துளியிலிருந்து இந்த ஆபத்து எழ வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.