ஊராட்சி மன்ற தலைவியின் கணவரின் அலட்சியத்தால் அல்லாடும் மக்கள்

3339பார்த்தது
ஊராட்சி மன்ற தலைவியின் கணவரின் அலட்சியத்தால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்


கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாசார் கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

இதில் பாசாரின் ஏரிக்கரை அருகே வசிக்கும் பொதுமக்கள் பல மாதங்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி ஊராட்சி மன்ற தலைவியிடம் சொல்லலாம் என்று சென்றால் அவரின் கணவர் பாசார் ஊராட்சிக்கு நான்தான் தலைவர் என்னிடம் சொன்னாள் போதும் என்று சொல்கிறார். வேறு வழியில்லாமல் அவரிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எங்களுக்கு குடிதண்ணீர் முறையாக வழங்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையோடு தெரிவித்தனர்.

மேலும் இப்பகுதியில் உள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்து உள்ளதாகவும் இதுபற்றி ஊராட்சி மன்ற தலைவியின் கணவரிடம் தெருவிளக்குகள் சரிசெய்து தரக்கோரி பல முறை தெரிவித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை எனவும் வேறு யாரிடமாவது சொல்லலாம் என்றால் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நீங்கள் எங்கே சென்றாலும் மீண்டும் என்னிடம்தான் வரவேண்டும் என்று சொல்வதாக பெரும் வேதனையோடு தெரிவித்தனர்.

கோடைகாலம் தொடங்கி பொதுமக்களை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பொதுமக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லைஎன்றால் என்னசெய்வார்கள் குடிக்க தண்ணீர் வழங்க சம்மந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தொடர்புடைய செய்தி