நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாமக கிளை செயலாளர் கருணாமூர்த்தி வாகன விபத்துக்குள்ளாகி கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் இன்று மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் நெய்வேலி கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட வன்னியர் சங்க அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய தலைவர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.