கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல் துறையினர் நரிமேடு கெடிலம் ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கெடிலம் ஆற்றில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் கீழ்மாம்பட்டு வேல்முருகன் மணல் கடத்தி வந்தார். நடுவீரப்பட்டு காவல் துறையினர் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வேல் முருகனை கைது செய்தனர்.