வடலூர் தர்மசாலை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் வயது 35. இவரது மகன் கிஷோர் வயது 15. தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த கிஷோர், கடந்த 24 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் ஈட்டி எறிதல் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்து பலத்த காயமடைந்தார்.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மாணவரின் தந்தை வடலூர் காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீதும், உடற்கல்வி ஆசிரியர் மீதும் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.