கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகில் வாரம் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று வாரச்சந்தை நடைபெற்று வந்தது. காய்கறி கடைகளை விட சந்தையில் விலை குறைவாக இருக்கும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.