கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் விரிசல் ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.