கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 36 ஆம் ஆண்டு ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு இன்று மஞ்சள் விளையாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனர்.