கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 3 வது நாள் உற்சவமாக பச்சை சாத்தி முருகன் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் கோவிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.