கடலூர் மாவட்டம் விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திட்டக்குடி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, கடலூர், பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இன்று (நவம்பர் 24) மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கையில் தற்போது பண்டிகை மற்றும் திருவிழா நாட்கள் எதுவும் இல்லாமல் உள்ளதால் மக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என தெரிவித்தனர்.