தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூா் வடக்கு மாவட்டம் சாா்பில் இஸ்ரேலை கண்டித்து கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் ஏ. முகம்மது யாசின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ. அப்துல் வஹாப், பொருளாளா் ஏ. அப்துல் காதா், துணைத் தலைவா் ஏ. யாசா் அரஃபாத், துணைச் செயலா் ஏ. உபைதுல்லாஹ் முன்னிலை வகித்தனா். மாநில பேச்சாளா் இ. பாருக் கண்டன உரையாற்றினாா்.