கடலூர் மாவட்டம் புவனகிரி லட்சுமி நகரை சேர்ந்த பச்சமுத்து மகள் மீனாட்சி (வயது 21) பிஏ பட்டதாரி அவரது சகோதரர் மணிகண்டன் நடத்தி வரும் எலக்ட்ரானிக்ஸ் கடையில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 19ஆம் தேதி மதியம் உணவு அருந்த வீட்டிற்கு மீனாட்சி சென்றதை அடுத்து காணவில்லை. இதுகுறித்து பச்சமுத்து கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.