மகாராஷ்டிரா: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து ஃபோர்களை அடித்து விளையாடிய வீரர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இம்ரான் படேல் (35) அசௌகரியமாக உணர்ந்ததை தொடர்ந்து களத்தில் இருந்து வெளியேறினார். பவுண்டரி லைனுக்கு அருகே அவர் வந்த போது மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, சக வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற நிலையில் மருத்துவர்கள் இம்ரான் மரணமடைந்ததாக கூறியுள்ளனர்.