முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 38வது முறையாக வருகிற ஜூன் 14 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஓர் ஆண்டு ஆகவுள்ளது.
அதே போல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விபரங்களை கோரியும், அமலாக்கத்துறை தங்களுக்கு வழங்கிய ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.