78-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த தமிழறிஞரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குமரி அனந்தன் அவர்கள், “கலைஞரின் மகனிடம் தகைசால் விருது பெற்றதை தந்தையும் மகனும் எனக்கு அளித்த பெரிய ஆசீர்வாதமாக நினைக்கிறேன்” என்று பேட்டியளித்தார்.