கோவை பீளமேடு கோல்ட்வின்ஸ் பகுதியில் நேற்று (செப் 22) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற 2 பேர் மீது மோதியது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் விபத்தில் பலியானது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெயிண்டர் ரமேஷ்(50) என்பதும், படுகாயமடைந்தவர் திண்டுக்கல் அய்யன்குளம் பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா(42) என்பதும் தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் பீளமேடு பகுதியில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
இந்த விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காரை ஓட்டி வந்த திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன்(53) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.