ஈரோடு மாவட்டம் திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாஷா ( 41). இவர் ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி அவருக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு கடந்த 5ம் தேதி சாதிக் பாஷாவை போலீசார் கோவை அரசு மருத்துமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் இறந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.