கோவை - பெங்களூரு இடையே தினசரி விமான சேவை

73பார்த்தது
கோவை - பெங்களூரு இடையே தினசரி விமான சேவை
இண்டிகோ விமான நிறுவனம் கோவை-பெங்களூரு இடையிலான சேவையை விரிவுபடுத்தியுள்ளது. அக்டோபர் 1 முதல் இந்த வழித்தடத்தில் தினமும் 4 விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நான்காவது தினசரி விமானத்தின் நேர அட்டவணை பின்வருமாறு, 6E6427 பெங்களூரு-கோவை 14: 40-15: 45 (திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் ஞாயிறு) 320/321 விமானம்

6E6428 கோவை-பெங்களூரு 16: 20-17: 15 (திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் ஞாயிறு) 320/321 விமானம்
சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் விமானங்களின் நேர அட்டவணை: 6E602 பெங்களூரு-கோவை 15: 30-16: 20 321 விமானம், 6E968 கோவை-பெங்களூரு 16: 50-17: 55 321 விமானம் தற்போது அக்டோபர் 26 வரை இந்த விமானங்களுக்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த புதிய சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி