கோவையில் கிராப்ட் பஜார் 2024 கண்காட்சி மற்றும் விற்பனை

50பார்த்தது
பத்திரிக்கை செய்தி

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2024 கண்காட்சி மற்றும் விற்பனை

ஜூலை 18 முதல் 23 வரை 6 நாட்கள் நடைபெறுகின்றது

கோயம்புத்தூர், ஜூலை 18, 2024 - கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு நடத்தும் கைவினை பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை கிராப்ட் பஜார் 2024 என்ற பெயரில் கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் இன்று (ஜுலை 18) துவங்கி வரும் 23 - ம் தேதி வரை 6 நாட்களுக்கு நடைபெற உள்ளது. காலை 10. 00 மணி முதல் இரவு 8. 00 மணி வரை பொது மக்கள் கண்காட்சியை பார்வையிடலாம்.

கோவையில் செயல்பட்டு வரும் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு, ஒவ்வொரு ஆண்டும் கிராப்ட் பஜார் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்திய கைவினை பொருள் கலைஞர்கள், நெசவாளர்களை ஊக்குவிக்கவும், பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி, பொருட்களை வடிவமைத்தல், சந்தை விற்பனையை மேம்படுத்துதல் போன்றவைகளுக்கும் உதவி வருகிறது.
இந்த ஆண்டு கிராப்ட் பஜார் கண்காட்சி, கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் ஜூலை 18 முதல் 23 வரை நடக்கிறது. ஆறு நாட்கள் நடக்கும் கண்காட்சியில், 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி