கோவை: இணையவழி மகளிர் தின விழா கொண்டாட்டம்!

71பார்த்தது
கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயங்கி வரும் பெண்கள் மேம்பாட்டு மையத்தின் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா நேற்று இணைய வழியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் லாவண்யா கதிர், இணைச்செயலாளர் டாக்டர் விது பிரதிக்ஷா மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் R. கற்பகம் ஆகியோர் தலைமை தாங்கினார். நிகழ்வினை கோயம்புத்தூர் மாவட்ட கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் டாக்டர் வி. கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பெண்கள் அதிகாரம், பெண்கள் மற்றும் மனநலம், பெண்கள் மற்றும் பொழுதுபோக்கு தொழில், பெண்கள் மற்றும் காவல் படை, பெண்கள் மற்றும் விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சண்டிகர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் மன்பிரீத்சிங் மன்னா, சாரதா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர். ஜெயந்தி ரஞ்சன், ஐரோப்பாவைச் சேர்ந்த மென்பொருள் டெவலப்பர் திருமதி. மரியா ஸ்பிடெரி, அமெரிக்க சுகாதார கல்வி நிபுணர் மற்றும் தலைமை அதிகாரி ஆன்னி டேனியல், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் டாக்டர். விஜய் ஜெயின், நடிகரான நாஞ்சில் விஜயன், மற்றும் நடிகையும் இயக்குனருமான ஷாலின் சோயா ஆகியோர் இதில் பங்கேற்ற சிறப்புரையாற்றினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி