கோவை: நொய்யல் ஆற்றில் புற்றுநோய் ரசாயனங்கள்!

55பார்த்தது
கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகும் நொய்யல் ஆற்றில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பது பொது சுகாதாரத் துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
காட்மியம், ஹெக்ஸவலன்ட் குரோமியம், நிக்கல், காரீயம், ஆர்சனிக், நைட்ரைட் மற்றும் பாஸ்பேட் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் நொய்யல் ஆற்றில் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரசாயனங்கள், சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தால் கார்சினோஜென்ஸ் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவை விட அதிக அளவில் இந்த ரசாயனங்கள் நொய்யல் ஆற்றில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, கோவை மற்றும் திருப்பூரில் புற்றுநோய் பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளது.
தொழிற்சாலை கழிவுகளை முறையாக சுத்திகரிக்காமல் ஆற்றில் விடுவதால், நீர் மற்றும் மண் மாசுபாடு ஏற்படுகிறது. இது புற்றுநோய் பாதிப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
நொய்யல் நதியை பாதுகாக்க பெரிய அளவிலான போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என்று நொய்யல் நதி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திருஞானசம்பந்தம் நேற்று தெரிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தின் அடையாளமான நொய்யல் நதியை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்திருக்கிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி