பொள்ளாச்சி: 14 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு!

84பார்த்தது
பொள்ளாச்சி அருகே ஆனைமலை உப்பாற்றங்கரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழா 14 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோவிலில் பராமரிப்பு பணிகள், வர்ணம் பூசுதல், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணா தலைமையில் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளி கிருஷ்ணா, தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா டிசம்பர் 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் 9. 45 மணிக்குள் நடைபெறும். இந்த விழாவில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி