பேரூர்: உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

55பார்த்தது
கோவை பேரூரில் உள்ள மிகவும் பழமையான பச்சை நாயகி உடனமர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
இதையொட்டி வருகிற 25-ம் தேதி இரவு 8 மணிக்கு அதிமூர்க்கம்மன் பூச்சாட்டல் நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை, அதிமூர்க்கம்மன் திருவிளக்கு பூஜை நடக்கிறது. 2-ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் அதிமூர்க்கம்மன் வீதி உலா, வேள்வி பூஜை நடக்கிறது. 3-ம் தேதி இரவு 9 மணிக்கு சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபையில் அம்மன் திருவீதி உலா, 4-ம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு 8 மணிக்கு பூத வாகனம் மற்றும் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 5-ம் தேத மலர் ரதம் மற்றும் காமதேனு வாகனத்தில் அம்மன் வீதி உலா, 6-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா, அறுபத்து மூவர் அருட்காட்சி நடக்கிறது.
7-ம் தேதி யாகசாலை பூஜை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. 8-ம் தேதி அதிகாலை 5. 30 மணிக்கு யாகசாலை பூஜை, திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. 10-ம் தேதிதெப்பத் திருவிழா நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் என்று தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி