ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று (செப்.,20) கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரையாக 285 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு 113. 50 ரூபாய் முதல் 124. 99 ரூபாய் வரை ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை 268 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு 92. 69 முதல் 105 ரூபாய் வரை விலை கிடைத்தது.
மொத்தம் 553 கொப்பரை மூட்டைகளை 87 விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆறு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். இந்த வாரம் 27. 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம் 248. 85 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன என ஆனைமலை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தெரிவித்துள்ளார்.