தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு மகளிர் திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ், இதுவரை ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 637 மகளிருக்கு ரூ.1,047 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 68 ஆயிரத்து 927 மகளிருக்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும், 57 ஆயிரத்து 710 மகளிருக்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள், கலப்புத்திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு உதவும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.