கோவை: நட்சத்திர சிலம்பம் சுற்றி உலக சாதனை

57பார்த்தது
கோவை, வீரவர்மன் வீர சிலம்பாட்ட பயிற்சி பள்ளியின் மாணவர்கள் தீப்பந்தத்துடன் கூடிய சிலம்பாட்டத்தில் இரண்டு உலக சாதனைகளை படைத்து சாதனை படைத்துள்ளனர். 

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் தீப்பந்த சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். கோவை அவினாசி சாலையில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்வில் மாணவர்கள் ஒற்றை சிலம்பத்தின் இரு முனைகளிலும் நெருப்பு பற்றவைத்து 10 நிமிடங்கள் தீப்பந்த சிலம்பம் சுற்றியதுடன், நட்சத்திர வடிவிலான சிலம்பத்தின் 8 முனைகளிலும் நெருப்பு பற்றவைத்து 10 நிமிடங்கள் சுற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி