விமானத்தில் கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் என பல பொருட்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இது தவிர உணவுப்பொருட்களில் முக்கியமானதான தேங்காயை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் இதில் அதிக அளவு எண்ணெய் இருப்பது தான். இந்த எண்ணெய் எரியக்கூடிய பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்களில் தேங்காய்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.