பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 2வது வாரத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் நிலை குறித்த மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், கோவையில் கள ஆய்வு முடித்த பிறகு நவம்பர் 2வது வாரத்தில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.