கிளாம்பாக்கம் பேருந்து விவகாரம்: உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு

60பார்த்தது
கிளாம்பாக்கம் பேருந்து விவகாரம்: உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அவர்கள் விசாரித்து முடிக்கட்டும், அதற்குள் உச்சநீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எதாவது கோரிக்கை வைக்க வேண்டுமென்றால் தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது முன் வைக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.