ஓசூரில் தொழிலாளர் நடமாடும் மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தர்மபுரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் / இளைஞர்களுக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் மைய நூலகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்றார். மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 5 துணை சுகாதார மையம் கட்டடங்களும், நகர்புறத்தில் 2 துணை சுகாதார மைய கட்டிடங்களும், ரூ. 3.15 கோடி செலவில் கட்டப்படும் எனவும் அறிவித்தார். மேலும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வாச்சாத்தி முதல் கலசப்பாடி வரையிலான மலைப்பகுதிகளில் 5.2 கி.மீ, நீளத்திற்கு ரூ. 12 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.