சென்னையில் ரூ. 70 கோடி மதிப்புள்ள சுமார் 7 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மெத்தம்பட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 27-ஆம் தேதி மெத்தன்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டதாக என்சிபி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுமார் 70 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.