விஜய் - சீமான் கூட்டணி: புஸ்ஸி ஆனந்த் பதில்

66பார்த்தது
சீமானுடன் கூட்டணியா என்பதை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் முடிவெடுப்பார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் த. வெ. க சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் த. வெ. க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு ஏழை மக்களுடன் இணைந்து உணவருந்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த, த. வெ. க-வில் அரசியல் சார்ந்த அனைத்து முடிவுகளையும் கலந்தாலோசித்து விஜய்தான் எடுப்பார் என கூறினார்.

தொடர்புடைய செய்தி