திண்டுக்கல்: பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நேற்று (ஆகஸ்ட் 24) முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 2வது நாளான இன்று (ஆகஸ்ட் 25) முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றியவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படும். மாநாட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.