தியாகராய நகர் - Thiyagarayanagar

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்த கேள்விகளை வெறுக்கிறேன் - சீமான்

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்த கேள்விகளை வெறுக்கிறேன் - சீமான்

நான் தனித்துதான் போட்டியிடுவேன். நான் தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்கத் தயாராக இல்லை. என்னுடைய பயணம் என் கால்களை நம்பித்தான் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவரிடம், நாதகவும் பாஜக கூட்டணிக்குச் செல்லும் எனக் கூறப்படுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான், நீங்கள் என்னைப் பிடித்து தள்ளுகிறீர்கள். எனக்கு யாரும் வழிகாட்டவோ, அறிவுறுத்தவோ அவசியம் இல்லை. எனக்கு சொந்தமாக மூளை இருக்கிறது. சிந்திக்கிற ஆற்றல் இருக்கிறது. நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் செய்வேன். மீண்டும் மீண்டும் அந்த கேள்வியை எழுப்புவதை வெறுக்கிறேன்.  அருவருப்பாக உணர்கிறேன். நான் தனித்துதான் போட்டியிடுவேன். மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டில் கடைசி வலிமை அரசியல் அதிகாரம்தான். அம்பேத்கர் போன்ற கல்வியில் சிறந்தவர் உலகில் எவரும் இல்லை. எல்லா துன்பங்களுக்குமான சாவி ஆட்சி அதிகாரம் மட்டுமே என்று அவரே கூறியிருக்கிறார். அதிகாரம் மிக வலிமையானது என்றும் கூறிவிட்டார். அதை நாங்கள் முழுக்க ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆனால் இன்றைக்கு இருக்கிற திராவிட அதிகாரம் மிகக் கொடுமையானதாக இருக்கிறது. அதை மாற்றுவதற்காக போராடுகிறோம் என்று அவர் கூறினார்.

வீடியோஸ்


சென்னை