தமிழுக்கு துரோகம் இழைக்கிறது தமிழக அரசு - ராமதாஸ் சாடல்

52பார்த்தது
தமிழுக்கு துரோகம் இழைக்கிறது தமிழக அரசு - ராமதாஸ் சாடல்
“தமிழைக் கட்டாயப் பாடமாக்க, தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்க தமிழக அரசால் முடியுமா? ” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ''தமிழால் முடியும்'' என்ற வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற உள்ளது. அன்னைத் தமிழ் வளர்ச்சிக்காக நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் வரவேற்கத்தக்கவை தான். ஆனால், அன்னைத் தமிழுக்கு கால் நூற்றாண்டுக்கும் மேலாக செய்து வரும் துரோகத்தை இது போன்ற நிகழ்ச்சிகள் எனும் முகமூடியை போட்டு மறைக்கும் தமிழக அரசின் முயற்சி வெற்றி பெறாது. அன்னைத் தமிழுக்கு தமிழக அரசு இழைத்து வரும் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறிய அப்போதைய கலைஞர் அரசு, எட்டாம் வகுப்புக்கு மாற்றாக ஐந்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாய பயிற்றுமொழியாக அறிவித்து 19. 11. 1999ஆம் நாளில் அரசாணை பிறப்பித்தது. ஆனால், அந்த அரசாணை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி