சென்னை அரும்பாக்கம் ஜானகி காலனி தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் கோயில் உள்ளது. கோயிலுக்கு எதிரில் வசித்துவரும் நபர் ஒருவர், தினமும் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த நாய்கள் அனைத்தும் கோயிலுக்குள் சென்று சிறுநீர், மலம் கழித்து அசுத்தப்படுத்தியுள்ளது. இதனால் கோயில் நிர்வாகம் சார்பில், தெரு நாய்கள் கோயிலுக்குள் வராதபடி விரட்டியடித்துள்ளனர். இதுசம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனிடையே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளதால் உடனடியாக அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அரசு இடத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலை இடிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை 100க்கும் மேற்பட்ட போலீசாருடன் கோயிலை இடிக்க வந்தபோது 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து விநாயகர் கோயிலை இடிக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் துணை ஆணையர் சினேகா பிரியா வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.