சென்னை: செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் அதிமுக புகார்

56பார்த்தது
சென்னை: செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் அதிமுக புகார்
மின் வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார் தெரிவித்துள்ளது.கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை உள்ளது.

இந்நிலையில், அவர் மீது அதிமுக ஐ. டி. பிரிவு இணைச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார், தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்புத்துறையில் நேற்று காலை புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், 'தமிழக மின்சார துறையில் 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை சுமார் 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் வாங்குவதற்கு ரூ. 1, 182 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.தமிழக மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ஒருவர் மூலமாக, இந்த ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த டெண்டரை எடுத்த நிறுவனத்துக்கு ரூ. 397 கோடி ரூபாய் லாபம் கிடைக்க உதவியுள்ளனர். ஆகையால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி