உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தும்படி, கூட்டணிக் கட்சி தலைவர்களை தி.மு.க. , மேலிடம் வற்புறுத்தியுள்ளது. தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர் என்றால், இங்கு, எங்கே ஜனநாயகம் இருக்கிறது.
இது ஜனநாயக வழிமுறை என, சொல்ல முடியாது. முடியாட்சியை நோக்கி தி. மு. க. , சென்று கொண்டிருக்கிறது. கருணாநிதி பேரன்; ஸ்டாலின் மகன் என்பதற்காக, துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளனர்.
பெண்களுக்கு அமைச்சரவையில் புதிதாக வாய்ப்பு வழங்கவில்லை. சமூக நீதி, சமவாய்ப்பு என, அடிக்கடி கூறுகிறீர்கள்; எங்கே சென்றது சமூக நீதி? ஊழல் வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜிக்கு, அவசர அவசரமாக அமைச்சர் பதவி வழங்கி உள்ளனர்.
இது, தவறான உதாரணம் மட்டுமல்ல, தமிழக அரசியலுக்கு வாரிசு அரசியல் நல்லதல்ல. இவ்வாறு தமிழிசை கூறினார்.