தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் ஓமன் நாட்டு Dunes Oman LLC நிறுவனத்திற்கு தமிழக இளைஞர்கள் 4 பேர் தேர்வாகிவுள்ளனர்.
அதையொட்டி, இன்று அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையத்திலிருந்து வழி அனுப்பி வைத்தார். அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.