வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலை எச்சரிக்கை

85பார்த்தது
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலை எச்சரிக்கை
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 39° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: குமரிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

23. 04. 2024 முதல் 25. 04. 2024 வரை: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

26. 04. 2024 முதல் 29. 04. 2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 23. 04. 2024 முதல் 27. 04. 2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

தொடர்புடைய செய்தி