தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒட்டி 705 சிறப்புப் பேருந்துகள்

84பார்த்தது
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒட்டி 705 சிறப்புப் பேருந்துகள்
பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பின்படி வரும் 10ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின்படி வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மக்கள் சென்னை திரும்புவதற்கு ஏற்ப வரும் 9ம் தேதி 705 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 7, 8 தேதிகளில் 1, 105 பேருந்துகளும், சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 160 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் என மொத்தமாக 1, 465 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்துகளை www. tnstc. in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி