சென்னை:  இஎஸ்ஐ மருந்தகங்களில் அமைச்சர் திடீர் ஆய்வு

69பார்த்தது
சென்னை:  இஎஸ்ஐ மருந்தகங்களில் அமைச்சர் திடீர் ஆய்வு
சென்னையில் உள்ள இஎஸ்ஐ மருந்தகங்களை ஆய்வு செய்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வி. கணேசன், மருந்து இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து, தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வி. கணேசன், சென்னை கொண்டித்தோப்பு மற்றும் சூளை பகுதிகளில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருந்தகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.

அப்போது மருந்தகங்களுக்கு வந்த வெளி நோயாளிகளிடம், முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். மருத்துவர்கள், பணியாளர்கள்உரிய நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்றும் ஆய்வு செய்தார்.

மேலும், போதிய மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பதையும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இஎஸ்ஐ மருத்துவமனைகளின் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், மருத்துவர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி