சென்னை துறைமுகப் பகுதியில் பாஜகவின் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று இரவு நடந்தது. அதில் தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன், நாயனார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், சரஸ்வதி, எச். ராஜா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.