9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

78பார்த்தது
9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜுலை 19) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவையில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி