முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு

76பார்த்தது
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு
தேனி கூடலூர் லோயர் கேம்ப் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் வருகிற ஜூன் 13 மற்றும் 14ஆகிய தேதிகளில் மத்திய கண்காணிப்புக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் மத்திய கண்காணிப்புக் குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி