ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பல தனியார் நிறுவனங்கள் பான் எண்ணை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு இது போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறது. டிசம்பர் 31-க்குள் ஆதார் பான் கார்டை இணைக்காவிட்டால் வங்கி உள்ளிட்ட சேவைகளில் பாதிப்பு ஏற்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இணைப்புக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகவும்.