கார் மீது டிராக்டர் மோதி பயங்கர விபத்து - 9 பேர் பலி

159562பார்த்தது
கார் மீது டிராக்டர் மோதி பயங்கர விபத்து - 9 பேர் பலி
பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று (மார்ச்18) காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. NH-31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரில் சிலர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி